Skip to main content

கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

Local Holiday Notice for Cuddalore District

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் (சபாநாயகர் திருக்கோயில்)களில்  வருகின்ற 20-ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற இருப்பதால் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக ஜனவரி 8-ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

 

அதேசமயம் அவசர அலுவல்களை கவனிக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும் எனவும் ஆட்சியர் பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்