Skip to main content

உள்ளாட்சித் தேர்தல்! வாக்காளர் பட்டியல் தயாரிக்க கலெக்டர்களுக்கு உத்தரவு!

Published on 28/08/2021 | Edited on 28/08/2021

 

Local elections! Collectors instructed to prepare voter list

 

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. இதனை செப்டம்பர் 15-க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து தேர்தலை நடத்துவதற்கான பணிகளைக் கவனிக்க மாநில தேர்தல் ஆணையத்தைக் கேட்டுகொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

 

கடந்த 2 மாதங்களாக இதற்கானப் பணிகளை கவனித்து வந்தது ஆணையம். சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வருவதால் தேர்தலுக்கான தேதியை அறிவிக்காமல் இருக்கிறார்கள். இந்த நிலையில், செப்டம்பர் 13-ந் தேதியோடு நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு பெறுகிறது. கூட்டத் தொடர் முடிந்ததும்,  நிலுவையிலுள்ள  9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதற்கு முன்னோட்டமாக, குறிப்பிட்ட 9 மாவட்டங்களில் அடங்கியுள்ள வாக்காளர்களின் பட்டியலை தயாரிக்க உத்தரவிட்டுள்ள தேர்தல் ஆணையம், இந்த மாதம் 31-ந் தேதிக்குள் இறுதி வாக்காளர்கள் பட்டியலை வெளியிட மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து, இறுதி வாக்காளர்கள் பட்டியலை இறுதி செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள் 9 மாவட்ட ஆட்சியர்கள்.

 


 

சார்ந்த செய்திகள்