8 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றங்களில் பல்வேறு கண்டனங்களுக்குப் பிறகு அவசர அவசரமாக ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதாக அறிவித்த தேர்தல் ஆணையம் வழக்கத்தை மாற்றி கிராமப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் என்று அறிவித்தார்கள். அதிலும் வரையறை பிரச்சனைஏற்பட்டதால் புதிய மாவட்டங்களை ஒதுக்கிவிட்டு மீதிக்கு தேர்தல் என்று அறிவித்து 27, 30 ஆகிய இரண்டு நாட்கள் நடத்துகிறார்கள்.

Advertisment

இப்படி அவசர அவசரமாக தேர்தல் நடத்தப்படுவதால் 8 ஆண்டுகளாக புதிய வாக்காளர்களாக பதிவாகி உள்ள இளைஞர்கள் முதல் முறையாக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய உள்ளனர். இப்போது அந்த புதிய வாக்காளர்களுக்கு தான் எப்படி வாக்களிப்பது? எப்படி வாக்களிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

Local election after 8 years ... New voters in the mess of the election commission

அதாவது இந்த புதிய வாக்காளர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்களித்திருப்பார்கள். ஆனால் இப்போது தான் முதல் முறைாக வாக்குச் சீட்டில் வாக்களிக்க உள்ளனர். அதனால் தான் குழப்பம்.

இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்று ஊருக்கு ஊர் மாதிரி வாக்குப் பதிவு முகாம்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். ஆனால் ஒரே நேரத்தில் ஊாரட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர், மாவட்டக்குழு வார்டு உறுப்பினர் வேட்பாளர் என்று ஒரே நேரத்தில் 4 வேட்பாளர்களுக்கு தனி தனிச்சீட்டில் வாக்களிக்க வேண்டி உள்ளது. அதனால் தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது இளைஞர்களுக்கு.

Advertisment

இதுவரை வாக்குப் பெட்டியை கூட பார்க்காத நாங்கள் எப்படி ஓட்டுப் போடுவது என்பதும் தெரியல. இதனால் பல வாக்குகள் செல்லாத வாக்குகளாக வாய்ப்பும் உள்ளது. தேர்தல் ஆணையம் அவசரகதிலில் விழிப்புணர்வு மாதிரி வாக்குப்பதிவு மையங்கள் நடத்தாததே காரணம் என்கின்றனர்.