Advertisment

உள்ளாட்சி பதவிகள் ஏலம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

fhj

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, வேலூர்‌, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம், தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது.

Advertisment

கடந்த இரண்டு நாட்களில் 4,597 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை அடுத்த சில நாட்களில் வெகுவாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபுறம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மக்கள் ஆர்வம் காட்டும் நிலையில், சில இடங்களில் உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இதுதொடர்பாக தற்போது தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் " உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடுவது மக்களாட்சி தத்துவத்துக்கு எதிரானது , அப்படி ஏலம் விடுவது கண்டுபடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

Advertisment

election commission
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe