விருதுநகர் மாவட்ட ஒன்றியங்களில் விறுவிறு வாக்குப்பதிவு...!

உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி ஆகிய 6 ஒன்றியங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

Local-Body-Elections-Virudhunagar District

59 பேர், 10 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கும், 425 பேர், 97 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும், 853 பேர், 242 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 3060 பேர், 1155 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் என மொத்தம் 4397 பேர் வேட்பாளர்களாகப் போட்டியிடும் நிலையில், வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விருதுநகர் ஒன்றியத்திலுள்ள அல்லம்பட்டி வாக்குச்சாவடியிலும், சாத்தூர் ஒன்றியத்திலுள்ள ஓ.மேட்டுப்பட்டியிலும், ஆண்களும், பெண்களும் தங்களின் ஜனநாயக் கடமையை நிறைவேற்றுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆர்வத்துடன் வாக்களித்து வருவதைப் போலவே, மற்ற 4 ஒன்றியங்களிலும் வாக்குகள் பதிவாகி வருகின்றன.

local body election Virudhunagar
இதையும் படியுங்கள்
Subscribe