தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணி முதல் வேகமாக நடைபெற்று வருகிறது. தேர்தலின் போது ஒவ்வொரு வாக்குச்சாவடி நுழைவு வாயில் முன்பும் வேட்பாளரின் பெயர், முகவரி, சின்னம் முதலியவை அடங்கிய அடையாள விளம்பர அட்டை ஒட்டப்பட்டிருக்கும்.

local-body-elections-naam-thamizhar-symbol-missing

Advertisment

Advertisment

ஆனால் கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் அடையாள விளம்பர அட்டையில் நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி சின்னம் பொறிக்கப்படமால் இருப்பதைப் பார்த்து அதிருப்தி அடைந்த நாம் தமிழர் கட்சியினர், தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டனர். இதனால் அந்த வாக்கு சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.