ஊரக உள்ளாட்சி தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி அளித்த மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 30- ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி மாதம் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.

local body election votes recounting chennai high court order

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த கடலூர் மாவட்டம் சத்தியவாடி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட செங்கல்வராயன், வேட்பாளர் மற்றும் முகவர் வருமுன்னரே வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்டம் தவரகரை பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட அமராவதி மற்றும் திமுக சார்பில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி 50- க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

Advertisment

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, மறுவாக்கு எண்ணிக்கை கோரி வேட்பாளர்கள் அளித்த மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஜனவரி 13- ஆம் தேதி தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், மறுவாக்கு எண்ணிக்கை கோரி அளித்த விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்காத தேர்தல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என எச்சரித்து, வழக்குகளின் விசாரணையை ஜனவரி 13- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.