நகர்ப்புறங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல், ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடைக்கோரி சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிய நிலையில், உச்சநீதிமன்ற விடுமுறைக்கால பதிவாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (02.01.2020) எண்ணப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.