Advertisment

இன்று மாலை ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு?

LOCAL BODY ELECTION STATE ELECTION COMMISSIONER PRESSMEET

Advertisment

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று (13/09/2021) மாலை 05.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார். செய்தியாளர் சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத மாவட்டங்களில் தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டிவரும் நிலையில், இந்த மாவட்டங்களில் தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பின்போது அறிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

local body election State Election Commission
இதையும் படியுங்கள்
Subscribe