Advertisment

உள்ளாட்சித் தேர்தலில் 09.00 மணி நிலவரப்படி 10.04% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (27.12.2019) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisment

சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் உள்ளதேர்தல் கட்டுபாட்டு அறையில்இருந்தவாறே, ஊரக உள்ளாட்சித் தேர்தலை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன்ஆகியோர்வாக்குப்பதிவுகளை வெப் கேமராவில் நேரில் பார்த்து வருகின்றனர்.

local body election state election commissioner press meet

இதனிடையேசெய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர், முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் காலை 09.00 மணி வரை 10.04% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். அதன்படி மதுரை- 7.47%, நாமக்கல்- 13% ஈரோடு- 11.25%, திருச்சி- 16%, அரியலூர்- 6.47%, தூத்துக்குடி- 9.69%, திருவாரூர்- 12.84%, புதுக்கோட்டை- 20%, சேலம்- 12.03%, தேனி- 12%, கன்னியாகுமரி- 9.03%, கரூர்- 14.88%, கிருஷ்ணகிரி- 8.16%, சிவகங்கை- 6.8%, விருதுநகர்- 8.25%, ராமநாதபுரம்- 10.6%, திருவள்ளூர்- 6% வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் சிறிய குறைகள் இருப்பதாக புகார் வந்தன. இவ்வாறு தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறினார்.

PRESS MEET state election commissioner local body election Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe