ADVERTISEMENT

உள்ளாட்சி தேர்தலில் ப்ளக்ஸ், பேனருக்குத் தடை...மாநில தேர்தல் ஆணையம் அதிரடி...!

05:00 PM Dec 12, 2019 | Anonymous (not verified)

தமிழகம் முழுக்க உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி ஈரோட்டில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விளக்கமளித்தனர். அப்போது, "கிராமப்புற உள்ளாட்சி அமைப்பான பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் பணிகள் மாநிலம் முழுக்க தொடர்ந்து நடத்து வருகிறது.

ADVERTISEMENT


ADVERTISEMENT


போட்டியிடும் வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல் செய்து, அவரின் வேட்பு மனு ஏற்கப்பட்டபின், வேட்பாளருக்கு வழங்கப்படும் வேட்பாளர் அங்கீகார நகலுடன், அந்த வேட்பாளர், ஒரு வாகனத்துக்கு மட்டும், அந்தந்த பகுதி மாவட்ட வருவாய் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். அதே போல் அவர் சார்ந்த பகுதியில் தலைவர்களின் பிரசாரம், பொதுக்கூட்டம் மற்றும் அரங்க கூட்டம் என எது நடத்துவதாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ., மற்றும்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லது டி.எஸ்.பி., ஆகியோரிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

மிக முக்கியமானது பேனர், பிளக்ஸ் போர்டு வைக்க முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவரவர்களின் சின்னம், பிரச்சார விபரம், மக்களுக்குத் தரும் வாக்குறுதிகள் இருந்தால், அவற்றை அச்சடித்த துண்டு பிரசுரங்களில் மட்டுமே வழங்க வேண்டும். தேர்தலில் போட்டியிடும் பஞ்சாயத்து கவுன்சிலர், 9,000 ரூபாய், பஞ்சாயத்து தலைவர், 34,000 ரூபாய், யூனியன் கவுன்சிலர் 85,000 ரூபாய், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், 1.70 லட்சம் ரூபாய் வரை மட்டுமே செலவிட வேண்டும்.

இதற்கான செலவுத்தொகை கணக்குகளை, தேர்தல் முடிந்த ஒரு மாதத்திற்குள் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும். சென்ற நாடாளுமன்ற தேர்தலின்போது தேர்தல் கமிஷனால் வெளியிடப்பட்ட உணவு வகைகளின் விலைப்பட்டியலின் படியே, இந்த உள்ளாட்சி தேர்தலிலும் கணக்கிடப்படும். அதற்கேற்றவாறு வேட்பாளர்கள் செலவுகளை வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி தேர்தல் செலவுத்தொகையை தாக்கல் செய்யாதவர்கள் மீது, தேர்தல் ஆணையம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். அந்த வேட்பாளர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். வேட்பு மனு தாக்கலின்போது, சம்பந்தப்பட்ட வேட்பாளர், அவரை முன்மொழிபவர் மற்றும் அவர் விரும்பும் மூன்று நபர்கள் என ஐந்து பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்யும் அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.


தேர்தல் பணிகளை கவனிக்க, மாவட்ட அளவில் தேர்தல் பார்வையாளரும், சிறப்பு நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள் . அவர்கள் வேட்பாளர்கள் செய்யும் பிரசாரம், செலவினம், தேர்தல் விதிமீறல் போன்றவைகளை கவனிப்பார்கள். வரும், 19ல் வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற்று, இறுதி பட்டியல் அறிவிக்கப்பட்டதும், தேர்தல் பறக்கும் படையினர் உடனே செயல்பட தொடங்குவார்கள்" என தெரிவித்தனர்.

.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT