Advertisment

2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் - வாக்குப்பதிவு விறுவிறு

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக ஊரகஉள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகின்றது. முதல் கட்ட தேர்தல் 27ம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட தேர்தல் காலை ஏழு மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 46, 639 ஊராட்சி உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று வாக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 05.00 மணியுடன் நிறைவடைந்தது.

Advertisment

58 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி, 2,544 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி, 4,924 ஊராட்சி தலைவர் பதவி, 38, 916 வார்டு உறுப்பினர் பதவிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டாம்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுமார் 1.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

elections
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe