மறுவாக்கு எண்ணிக்கையில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27- ஆம் தேதி மற்றும் 30 ஆம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி (இன்று) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று (02.01.2020) தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

LOCAL BODY ELECTION RESULTS

இந்நிலையில் விருத்தாசலம் 1- வது வார்டில் மறு வாக்கு எண்ணிக்கையில் சுயேச்சை வேட்பாளர் ஆனந்தக்கண்ணன் வெற்றி பெற்றுள்ளார். அதிமுகவின் அர்ஜுனன் வெற்றி பெற்றதாக அறிவித்த நிலையில் சுயேச்சை வேட்பாளர் தரப்பினர் தேர்தல் அலுவலரிடம் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து மீண்டும் நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் சுயேச்சை வேட்பாளர் ஆனந்தக் கண்ணன் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

local body election RESULTS 2020
இதையும் படியுங்கள்
Subscribe