நீலகிரி, நாமக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அனைத்து பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது. அதேபோல் தூத்துக்குடி மற்றும் தேனியிலும் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்தது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்த எஞ்சிய 22 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisment

local body election results update five district

திருவாரூர் மாவட்டத்தில் 7 ஒன்றியங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் 7ல் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றது. அதேபோல் மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது.

Advertisment

அதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் மொத்தமுள்ள 15 ஒன்றிய கவுன்சிலர்களுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றது.