Skip to main content

உள்ளாட்சித் தேர்தல்: வெற்றி பெற்றவர்கள் விவரம்!

Published on 03/01/2020 | Edited on 03/01/2020

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று (02.01.2020) காலை 08.00 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை 18 மணி நேரமாக தொடர்கிறது. அத்துடன் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

உள்ளாட்சித் தேர்தல்: வெற்றி பெற்றவர்கள் விவரம்!


தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் ஒன்றியம் 15- வது வார்டில் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் மனைவி சுகிர்தா வெற்றி. அதேபோல் 13- வது வார்டு கவுன்சிலராக அரிச்சந்திரன் வெற்றி. 

மதுரை: கொட்டாம்பட்டி ஒன்றியம் 5- வது வார்டு மாவட்ட கவுன்சிலராக ராஜலட்சுமி வெற்றி. 

தேனி: போடியநாயக்கனூர் ஒன்றியம் 1- வது வார்டு மாவட்ட கவுன்சிலராக அதிமுக வேட்பாளர் ப்ரீத்தா வெற்றி. 

LOCAL BODY ELECTION RESULTS 2020 UPDATE

தேனி: கம்பம் ஒன்றிய 9- வது வார்டு மாவட்ட கவுன்சிலராக திமுக வேட்பாளர் தமயந்தி வெற்றி. 
திருவாரூர் ஒன்றியம் 9- வது வார்டில் மணிகண்டன் வெற்றி. 
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி ஒன்றியம் 11- வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பிரேமா வெற்றி. 
திருப்பூர்: அவிநாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக சாந்தி வெற்றி.
நாகை: வேதாரண்யம் ஒன்றியம் 19- வது வார்டு மாவட்ட கவுன்சிலராக பாஜக வேட்பாளர் சோழன் வெற்றி.
நாகை இரண்டாவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட 22 வயதான எம்சிஏ பட்டதாரி அனுசியா வெற்றி. 
திருவள்ளூர் 13- வது வார்டு மாவட்ட கவுன்சிலராக காங்கிரஸ் வேட்பாளர் தேவி வெற்றி. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை; 5 மாவட்டங்களில் மறுவாக்குப்பதிவு

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

West Bengal Local Government Elections inceident Repolling in 5 districts

 

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்து தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். முன்னதாக, வேட்புமனுத் தாக்கலின் போது பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் வன்முறையாக மாறி 12 வயது சிறுவன் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர்.

 

இதையடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் கடந்த சனிக்கிழமை (ஜூலை 08) ஒரேகட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார் 5 கோடியே 67 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்று இருந்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் சுமார் 65 ஆயிரம் மத்திய காவல்படை போலீசாரும், 70 ஆயிரம் மாநில போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

 

இருப்பினும் கூச்பெகார் என்ற பகுதியில் வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே வாக்குச் சாவடிக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் வாக்குச் சாவடியை சூறையாடினர். அதே பகுதியில் உள்ள மற்றொரு வாக்குப்பதிவு மையம் ஒன்றில் இருந்து வாக்குப் பெட்டியை இளைஞர் ஒருவர் தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவங்களும் நடைபெற்றது. மேலும், ஹூக்ளியில் உள்ள தம்சா வாக்குச் சாவடியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இரண்டு வாக்குப் பெட்டிகளைக் குளத்தில் வீசினர். பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களால் ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்தனர்.

 

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட வன்முறையால் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் புருலியா, பிர்பூம், ஜல்பைகுரி, நதியா மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள 697 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு இன்று  நடைபெற்று வருகிறது. காலை முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மேலும் பதற்றமான வாக்குப்பதிவு மையத்தில் மத்தியப் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

 

 

Next Story

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவில் உச்சகட்ட பரபரப்பு

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

west bengal local body election secnerio

 

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்து தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். முன்னதாக, வேட்புமனுத் தாக்கலின் போது பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் வன்முறையாக மாறி 12 வயது சிறுவன் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர்.

 

இதையடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று ஒரேகட்டமாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில் சுமார் 5 கோடியே 67 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். அசாம்பாவிங்களைத் தவிர்க்கும் வகையில் சுமார் 65 ஆயிரம் மத்திய காவல்படை போலீசாரும், 70 ஆயிரம் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் கூச்பெகார் என்ற பகுதியில் வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே வாக்குச்சாவடிக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் வாக்குச்சாவடியை சூறையாடினர். மேலும் வாக்குச்சாவடியில் இருந்த வாக்கு சீட்டுகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து தேர்தலில் வாக்களிக்கச் சென்ற மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குச்சாவடி சூறையாடப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

 

பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கலவரங்களைத் தடுக்கும் விதமாக போலீசார் தடியடி நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. கூச்பெகார் மாவட்டத்தில் உள்ள வாக்குப்பதிவு மையம் ஒன்றில் இருந்து வாக்குப் பெட்டியை தூக்கிக்கொண்டு இளைஞர் ஒருவர் ஓட்டம் பிடித்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும், ஹூக்ளியில் உள்ள தம்சாவில் உள்ள வாக்குச்சாவடியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு இரண்டு வாக்குப்பெட்டிகளை குளத்தில் வீசினர். வாக்குப்பதிவு மையத்தில் மத்தியப் பாதுகாப்பு படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். முன்னதாக முர்ஷிதாப் என்ற இடத்தில் நேற்று நள்ளிரவு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.