நீலகிரி, நாமக்கல், தேனி கன்னியாகுமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அனைத்து பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்த எஞ்சிய 23 மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நேற்று (02.01.2020) காலை 08.00 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடைபெற்று வருகிறது.

Advertisment

local body election ramanathapuram district results

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் 16- வது வார்டில் போட்டியிட்ட முன்னாள் எம்.பி அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியை திமுக வேட்பாளர் தவ்பீக் அலி தோற்கடித்தார். இதே ஒன்றியம் 2- வது வார்டில் அன்வர் ராஜாவின் மகள் ராவியத்துல் அதரியா தோல்வியுற்ற நிலையில் மகனும் தோல்வியடைந்தார்.