Advertisment

உள்ளாட்சித் தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை!

சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர் புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994, பிரிவு 80 ஏ-ன் படி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தொழிற்சாலை தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக, அந்தந்த தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியில் வாக்குப்பதிவு நாளன்று அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

Advertisment

local body election private companies holidays tn government

எனவே, தொழிற்சாலை நிர்வாகத்தினர் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி விடுமுறை அளித்து ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisment
tn govt Holidays private companies Salem local body election
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe