Skip to main content

அதிகாரிகளின் அலட்சியம்...வாக்களிக்க மறுத்த கிராமம்...வெறிச்சோடிய வாக்குசாவடி மையம்...!

Published on 27/12/2019 | Edited on 27/12/2019

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ளது மாயாகுளம். இந்த மாயாகுளம் ஊராட்சி மன்ற தலைவர் ( ரிசர்வ் தொகுதி ) பதவிக்கு மொத்தம் 11 பேர் போட்டியிடுகின்றனர். அதாவது மாயாகுளம், புதுமாயாகுளம், பெரிய மாயாகுளம், தொண்டாலை மேலக்கரை, பாரதிநகர், விவேகானந்தபுரம், கிழக்கு மங்களேஸ்வரி நகர் ஆகிய பகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 4980 பேர் உள்ளனர்.

 

Local body election-officers-villagers refused vote

 

 

இந்நிலையில் இன்று புதுமாயாகுளம் மற்றும் பெரியமாயாகுளம் பகுதிகளில் 1680 வாக்குகள் உள்ளன. இங்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட பூத் சிலீப்களில் மாயாகுளம்  என்று இல்லாமல் அதற்க்கு பதிலாக அருந்ததியர் காலணி என்று உள்ளதாக கூறி அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்து வாக்களிக்கமாட்டோம் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Local body election-officers-villagers refused vote

 



இதையடுத்து உடனடியாக அப்பகுதிக்கு வந்த தாசில்தார் வீரராஜா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கபாண்டியன், ரமேஷ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளது. இப்போது வாக்களியுங்கள், பின்னர் தவறு சரிசெய்து கொள்ளப்பட்டும் என்றார்.அதற்கு அப்பகுதி பொதுமக்கள் நீங்கள் சரிசெய்து கொடுங்கள் இல்லையென்றால் வாக்களிக்கமாட்டோம் என்று கூறி கலைந்து சென்றுவிட்டனர்.

 

Local body election-officers-villagers refused vote

 



இதேபோல் பெரிய மாயாகுளம் பகுதிகளிலும் அப்பகுதி பொதுமக்கள் தங்கள் ஊரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்பகுதி சேர்ந்த பேராசிரியர் கபீர் கூறுகையில், "கடந்த தேர்தல்கள் அனைத்திலும் மாயாகுளம், பெரிய மாயாகுளம் என அச்சிடப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறை ஊர் பெயர் மாற்றி வந்துள்ளது. இது அதிகாரிகள் அலட்சியமாகவும், பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக தெரிகிறது.

இந்த தவறை யார் செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.மேலும் அதிகாரிகளிடம் நாங்கள் எங்கள் உரிமைகளை தான் கேட்கிறோம். நாங்கள் சாலை மறியலில் ஈடுபடவில்லை,சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தவில்லை. ஆனால் அதிகாரிகள் ஏன் எங்களது கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை, ஊரின் பெயரை மாற்றினால் மட்டுமே வாக்களிப்போம் என்று கூறினார். இவ்வாறு அதிகாரிகள் செய்த தவறினால் இன்று பொதுமக்கள் வாக்களிக்காமல் சென்றுவிட்டனர். இதனால் வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

கூகுள் மேப்பால் வழிமாறிய வடநாட்டு சாமியார்கள்; அதிர்ச்சியில் உறைந்த மணமேட்டுப்பட்டி

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Northern preachers who were diverted by Google Maps; The public surrounded

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

சென்னை திருவண்ணாமலையின் செய்யாறு திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிபட்டி, நாகை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகள் கடத்த வந்ததாக வட மாநிலத்தவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. வதந்திகளை நம்ப வேண்டாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் ராமேஸ்வரத்திற்கு சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்த வடமாநில சாமியார்கள் கூகுள் மேப் மூலம் சேலத்துக்கு செல்ல முயன்ற நிலையில் அவர்கள் வழி தவறி கிராமம் ஒன்றில் புகுந்துள்ளனர். இதனால் குழந்தைகள் கடத்த வந்த நபர்கள் என தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து சேலத்திற்கு கூகுள் மேப் உதவியுடன் வடமாநில சாமியார்கள் பயணித்தபோது தவறுதலாக விராலிமலை-மணப்பாறை சாலையில் உள்ள மணமேட்டுப்பட்டி கிராமத்திற்குள் புகுந்துள்ளனர். கிராமத்துக்குள் வந்த அவர்கள் வழி தெரியாமல் அந்த வழியில் இருந்த சிறுவர்களிடம் வழி கேட்டுள்ளனர். இதனைப் பார்த்த அந்த கிராமப் மக்கள் கும்பலாக வந்துள்ள சாமியார்களை கண்டு அதிர்ந்து குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என நினைத்து அவர்களை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களை போலீசில் ஒப்படைத்தனர். வடமாநில சாமியார்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ராமேஸ்வரம் சென்று விட்டு திரும்பி வந்தது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் பத்திரமாக சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'நாங்க என்ன வானத்துல இருந்தா குதிச்சோம்' - அத்திப்பட்டியான சோளப்பட்டி

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
'Whatever sky we jumped from'-solapatti people struggle

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ளது மஞ்சாராஹள்ளி ஊராட்சி. அங்கு டி.சோளப்பட்டி எனும் குக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள நில பட்டாக்கள் தொடர்பான எந்த ஒரு தகவலும் 1929 ஆம் ஆண்டுக்குப் பிறகு பத்திரப் பதிவு அலுவலகங்களில் இருக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுடைய நிலங்களை மாற்று நபருக்கு விற்கவோ அல்லது புது நிலங்களை வாங்கவோ முடியாமல் தவித்து வருகின்றனர். தங்களுடைய கிராமம் தொடர்பான ஆவணங்களைப் பதிய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெளியிட்ட வீடியோக்களில், 'எங்க பெரியவங்க எல்லாம் ஆண்டுட்டு போயிட்டாங்க. நாங்க நிலத்தை யாருக்கும் விக்க முடியல. நிலத்தை வாங்கவும் முடியல. தர்மபுரிக்கு போனாலும் பதிவில்லைன்னு சொல்றாங்க, பென்னாகரம் போனாலும் பதிவில்லைன்னு சொல்றாங்க, மேச்சேரி போனாலும் பதிவில்லைன்னு சொல்றாங்க, சேலம் போனாலும் பதிவில்லைன்னு சொல்றாங்க. ஏன் எங்களுக்கு மட்டும் பதிவாகவில்லை. நாங்க என்ன வானத்தில் இருந்தா குதிச்சோம். கவர்மெண்ட் எங்களுக்கு மட்டும்  ஏன் பதிவு செய்யாமல் விட்டது. ஓட்டு கேட்க மட்டும் வரீங்க, எங்களுக்கு போடுங்க.... எங்களுக்கு போடுங்க... என்று. ஏன் எங்களின் இடத்தை பதிவு பண்ணக்கூடாது. பதிவு பண்ணி குடுங்க' எனத் தெரிவித்துள்ளனர்.