சென்னை அடையாறில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, "புதிதாக ஆறு மாநகராட்சிகள், 30க்கும் மேற்பட்ட நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக வார்டுகள் மறுவரையறை செய்ய வேண்டியுள்ளது. மறுவரையறைக்காக 100 நாட்கள் அவகாசம் தர வேண்டியுள்ளது. பொதுமக்களின் குறைகளைக் கலைந்திட மேலும் 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த உறுதியாக உள்ளது. டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு முயன்றுவருகிறது. ஓரிரு மாதங்கள் கூடலாம் அல்லது குறையலாம்" எனத் தெரிவித்தார்.
"டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்" - அமைச்சர் கே.என். நேரு பேட்டி....
Advertisment
Advertisment