Advertisment

அதிக இடங்களில் வென்றும் பிரயோஜனம் இல்லை...கரூர் அதிமுக கவலை...!

தமிழகத்தின் மேற்கு பகுதி மாவட்டங்களில் அதிமுக தான் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் அவர்கள் தலைமையில் யூனியன் சேர்மன் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளை பெறமுடியாமல் சில இடங்களில் நடந்து வருகிறது. குறிப்பாக யூனியன் சேர்மன் பதவியில் ஒரு இடத்தில் அதிமுக அதிகமாக வெற்றி பெற்றும் அந்த அதிமுகவே திமுகவிற்கு தலைவர் பதவியை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விசித்திரத்தை பார்ப்போம்.

Advertisment

local-body-election-karur-admk

கரூர் மாவட்டத்தில் கரூர், க.பரமத்தி, அரவக்குறிச்சி, தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், குளித்தலை, தோகைமலை ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் அதிமுக வேட்பாளர்களே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். ஆம், இந்த எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு அதிமுகவினரை சேர்ந்தவர்களையே தேர்ந்தெடுக்க முடியும்.

ஆனால், ஒரே ஒரு யூனியன் சேர்மேனான கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் அந்த நிலை இல்லை. காரணம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு பட்டியல் பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவரே ஒன்றியக்குழு தலைவர் ஆக முடியும். இதில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 20 ஒன்றிய வார்டுகள் உள்ளன. சரிபாதி 10 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிலும் மூன்று இடங்கள் பட்டியல் பிரிவு பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தான் பிரச்சனையே இந்த மூன்று இடங்களிலும் திமுகவினரே வெற்றி பெற்றுள்ளனர். பெண் பட்டியல் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகள் 2, 7 மற்றும் 11 ஆகும். இதில் கவனிக்கப்பட வேண்டியது இந்த மூன்று ஒன்றிய வார்டுகளிலும் திமுக பெண் வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். இது தவிர ஒன்றாவது வார்டு மற்றும் மூன்றாவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் பட்டியல் பிரிவைச் சேர்ந்த பெண் வேட்பாளர்களும் திமுகவை சார்ந்தவர்கள் ஆவார்கள்.

இதனால், அதிமுக கூட்டணியில் அதிக இடங்களில் வெற்றி பெற்றும் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு போட்டியிட பட்டியல் பிரிவு பெண் வேட்பாளர் யாரும் வெற்றி பெறாததால் தி.மு.க. கவுன்சிலரே தலைவர் பதவியை பிடிக்க முடியும்.

admk karur local body election results 2020
இதையும் படியுங்கள்
Subscribe