Advertisment

அதிமுகவை வென்ற கணவர்...பிஜேபியிடம் தோற்ற மனைவி...!

தமிழகத்தில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி மன்ற தேர்தல் முடிந்து வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தின் முதலாவது வார்டு மற்றும் நான்காவது வார்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisment

local body election-Husband won AIADMK-Wife lost BJP

முதலாவது வார்டில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பிஜேபி வேட்பாளர் குமார் 1859 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளரான கீதா ஸ்ரீதரை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். கீதா ஸ்ரீதர் 1727 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இந்த வார்டில் திமுக பிஜேபியிடம் தோற்று போனது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

ஆனால் இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் பிஜேபியிடம் தோற்று போன கீதா ஸ்ரீதரின், கணவர் ஸ்ரீதர் நான்காவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதுவும், இலட்ச கணக்கில் ஏலம் எடுத்து விட்டோம் என்று மார் தட்டிக்கொண்டிருந்த அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகனை எதிர்த்துப் போட்டியிட்டு 1307 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வென்றுள்ளார். அதிமுகவை கணவர் வென்றுள்ள நிலையில், மனைவி பாஜகவிடம் தோற்று போனது எல்லோரும் ஆச்சரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

admk results Local bodies elections
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe