Advertisment

கமல்ஹாசனுக்கு அரசியலும் தெரியவில்லை, அரசியல் சட்டமும் தெரியவில்லை... எச்.ராஜா

கமல்ஹாசனுக்கு அரசியலும் தெரியவில்லை, அரசியல் சட்டமும் தெரியவில்லை என மக்கள் நீதிமய்யத்தை சீண்டியிருக்கிறார் பாராதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா.

Advertisment

திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகே பில்லூர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் உறவினரான கிரிகனேஷை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Interview

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக ஆட்சியில் தான் இலங்கை மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதில் மத்திய அரசுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. தமிழக முதல்வர் இரட்டை குடியுரிமை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். நிச்சயமாக மோடி பரிசீலனை செய்து வழங்குவார்.

Advertisment

நடிகர் கமல்ஹாசன் உலக நாயகன் என்று சொல்லி கொண்டால் மட்டும் போதாது, குடியுரிமை திருத்த சட்டத்தில் உலக அறிவும் தேவை. கமல்ஹாசனுக்கு அரசியலும் தெரியவில்லை, அரசியல் சட்டமும் தெரியவில்லை. நாடாளுமன்ற நடவடிக்கையும் தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்.

அகில இந்திய அளவில் மக்கள் தொடர்பு இயக்கம், மக்கள் விழிப்புணர்வு இயக்கம் தொடங்க இருக்கிறது. இந்த விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் இந்திய குடியுரிமை சட்டத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று ஒரு மாதகாலம் வீடு வீடாகச் சென்று எடுத்துரைக்க உள்ளோம். அதனடிப்படையில் குடியுரிமை சட்டத்தை பற்றி தெரியாத ஸ்டாலினுக்கும், கமல்காசன் போன்றவர்களுக்கும் புரிய வைப்போம்’’ என்கிறார்.

MNM kamalhaasan campaign H Raja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe