Advertisment

அதிமுகவினரை வெற்றி பெறச் செய்யுங்கள்: இபிஎஸ்- ஓபிஎஸ்!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் வரும் 27- ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் டிசம்பர் 30- ஆம் தேதியும் நடக்கிறது. இந்நிலையில் 27 மாவட்டங்களில் முதல்கட்டமாக தேர்தல் நடக்கும் இடங்களில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

Advertisment

local body election eps ops statements for peoples

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறப் செய்யுங்கள் என்று வாக்களிக்கவுள்ள மக்களுக்கு அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக இபிஎஸ்- ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரகப் பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள் தொடர அதிமுகவின் வெற்றி இன்றியமையாதது. அனைவரது உரிமைகளையும், உணர்வுகளையும் மதித்து இடையூறு செய்யாமல் ஆட்சி நடத்துகிறது அதிமுக. தமிழகத்தில் வன்முறைக்கு இடம் தராத அன்பின் வழி நின்ற ஆட்சி அமைதியாக நடக்கிறது. தீய சக்திகளை ஒழித்து, நல்லவர்கள் கையில் உள்ளாட்சிப் பதவிகள் இருப்பது அவசியம் என்பதை மக்கள் அறிவீர்கள். இவ்வாறு இபிஎஸ்- ஓபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

admk Tamilnadu ops_eps local body election
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe