தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27- ஆம் தேதி மற்றும் 30- ஆம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

Advertisment

தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி (இன்று) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று (02.01.2020) தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

LOCAL BODY ELECTION DMK MK STALIN DISCUSSION

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்றனர். உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை தாமதமாக அறிவிப்பதாக கூறி வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் ஆலோசனைசெய்தனர்.