Advertisment

வாக்கு எண்ணிக்கை...திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவிற்கு ஏறுமுகம்..!

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

Advertisment

LOCAL BODY ELECTION-DMK LEADING IN DINDIGUL

இதில் கொடைக்கானல் ஒன்றியத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட பூங்கொடி 1-வது வார்டில் வெற்றி பெற்றார். இரண்டாவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராசிகா வெற்றி பெற்றார். ரெட்டியார்சத்திரம் 1வது வார்டு மணிகண்டன் சுயச்சை வெற்றி பெற்றார். ரெட்டியார் ஒன்றியத்தில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் விவேகானந்தன் வெற்றி பெற்றார்.

திண்டுக்கல் ஒன்றியத்தில் செட்டி நாயக்கன்பட்டியில் போட்டியிட்ட திமுக கூட்டணி (சிபிஎம்) வேட்பாளரான செல்வநாயகம் வெற்றி பெற்றார். ரெட்டியார் சத்திரம் ஒன்றிய திமுக வேட்பாளரான நாகலட்சுமி வெற்றி பெற்றார். நான்காவது வார்டில் போட்டியிட்ட ராஜலட்சுமி வெற்றி பெற்றார்.

தொப்பம்பட்டி ஒன்றியத்தில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. வேடசந்தூர், கல்வார்பட்டி ஒன்றியத்தில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பெசிலி வெற்றி பெற்றார். இரண்டாவது வார்டில் அதிமுக செல்வராஜ் வெற்றி பெற்றார். மூன்றாவது வார்டில் சார்லஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். நான்காவது வார்டில் திமுக வேட்பாளரான பாக்கியலட்சுமி வெற்றி பெற்றார்.

அதுபோல் வத்தலகுண்டு ஒன்றியத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட பரமேஸ்வரி வெற்றி பெற்றார். கட்டகா மன்பட்டி ஒன்றியத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட பெனினா வெற்றி பெற்றார். ஆத்தூர் ஒன்றியத்தில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஹேமலதா, சிந்தாமணி வெற்றி பெற்றனர். அது போல் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் நடைபெற்றுவரும் வாக்கு எண்ணிக்கையில் பெரும்பாலான ஒன்றியங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.

Advertisment
admk dindugal leading local body election
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe