Published on 05/09/2021 | Edited on 05/09/2021

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, 9 மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (05/09/2021) காலை 11.00 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். தி.மு.க.வின் தலைமை அலுவலகமான சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றன.
இதனிடையே, செப்டம்பர் 15- ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், மேலும், ஆறு மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.