உள்ளாட்சித் தேர்தல்: குடும்பத்துடன் சென்று வாக்களித்தார் முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (27.12.2019) காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

local body election cm palanisamy salem

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நெடுங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சிலுவம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு முதல்வர் பழனிசாமி தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். அதைத் தொடர்ந்து முதல்வரின் மகன் மிதுன்குமார், மருமகள் சங்கீதா, மனைவி ராதா ஆகியோரும் வாக்களித்தனர். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர் பதவிக்கு வாக்களித்தனர். ஏற்கனவே நெடுங்குளம் ஊராட்சியில் 9 வார்டு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வாகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

cm edappadi palanisamy local body election Salem
இதையும் படியுங்கள்
Subscribe