ADVERTISEMENT

நாகை மீனவர் வலையில் சிக்கிய லாப்ஸ்டர்

03:05 PM Jan 10, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாகையில், மீனவர் வலையில் சிக்கிய நான்கரை கிலோ எடை கொண்ட சிங்கி இறால் மீனை மீனவர்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை மீன்பிடி தளத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தினந்தோறும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவருகின்றனர். அப்படி மீன்பிடித்து விட்டு மீண்டும் கரைக்குத் திரும்பிய அமிர்தராஜ் என்பவரின் விசை படகின் வலையில் நான்கரை கிலோ எடை கொண்ட சிங்கி இறால் என்ற லாப்ஸ்டர் இறால் சிக்கியிருந்தது. "கைட்டின் மற்றும் கைட்டோசன் போன்ற வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட சிங்கி இறாலின் விலை தற்போது சர்வதேச அளவில் ஏறுமுகமாகவே இருக்கிறது. வளரும் நாடுகளில் சிங்கி இறாலுக்கு நல்ல வரவேற்பும் உள்ளது. அதனாலேயே இதன் விலையும் அதிகமாகவே உள்ளது. 1 கிலோ ரூ. 3,000 முதல் ரூ. 5,000 வரை விலை போகும்" என்கிறார்கள் மீனவர்கள்.


சிங்கி இறாலை சக மீனவர்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT