Advertisment

ஏற்றப்பட்டது 'மகாதீபம்'- பக்தியில் ஆர்ப்பரித்த திருவண்ணாமலை

Loaded 'Mahadeepam' - Tiruvannamalai chanted with devotion

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கருவறை முன்புள்ள மண்டபத்தில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கத்துடன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதற்காகக் கோயிலுக்குள் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

Advertisment

இந்நிலையில் தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான கோயிலின் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியின் மீது மகா தீபம் தற்போது ஏற்றப்பட்டுள்ளது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தீபத்தை தரிசித்தனர். இந்த மகா தீபம் 11 நாட்களுக்குத் தொடர்ந்து எரிவதற்காக 4 ஆயிரத்து 500 கிலோ நெய்யும், 1500 மீட்டர் காடா துணியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

தீபத் திருவிழாவைக் காண்பதற்காக 35 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் சுமார் 14 ஆயிரம் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்கு உதவுதற்காக அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள 044-28447703, 044-28447701, 8939686742 என்ற தொலைபேசி எண்கள் காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகள் காணாமல் போனால் அது குறித்து தகவல் தெரிவிக்க 9342116232 - 8438208003 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Festival thiruvannamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe