தென்காசியில் ஆட்டோ கவிழ்ந்து மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் திருச்சிற்றம்பலத்தில் இருந்து ஆனைக்குளம் பகுதிக்கு விவசாயப் பணிக்காக லோடு ஆட்டோவில் பலர் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் குறுக்கே நாய் ஓடி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆட்டோ ஓட்டுநர்வண்டியை திருப்பமுயன்றபோது திடீரென லோடு ஆட்டோ சாலை ஓரத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே மூன்று பெண்கள் உயிரிழந்த நிலையில் 14 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை வேளையில் விவசாயப் பணிக்காகசென்ற லோடு ஆட்டோ கவிழ்ந்து மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.