தமிழ்நாட்டில் அதிக அளவில் போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் மத்திய இணை அமைச்சரும் முன்னாள் தமிழக பாஜக தலைவருமான எல்.முருகன்.
தூத்துக்குடி மாவட்டம்எட்டயபுரத்தில் பாரதியார் நினைவுநாளை முன்னிட்டு பாஜக சார்பில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் சுதந்திரப்போராட்ட தியாகிகளின் குடும்பங்களுடன் கலந்துரையாடினர். அப்போது அந்த நிகழ்வில் கலந்துகொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச்சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் "போதைப் பொருளை ஒழிப்பது என்பது மிகவும் முக்கியமானது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பது அனைவரும் கவலை கொள்ள வேண்டிய விஷயம், தமிழக அரசு விரைவாக இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத்தெரிவித்துள்ளார்.