Advertisment

எல்.கே.ஜி., யு.கே.ஜி விடுமுறை நிறுத்திவைப்பு! 

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு விடுமுறை எனதமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் அந்த அறிவிப்பு தற்பொழுது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisment

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பாதிப்பால் இது வரை 5,080 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கரோனா வைரஸ் இதுவரை 127 நாடுகளுக்கு பரவியுள்ளது. அதேபோல் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 1,37,702 ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 76லிருந்து 85 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

 LKG, UKG Holiday Stop!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்தநிலையில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு மார்ச் 16- ஆம் தேதி முதல் மார்ச் 31- ஆம் தேதி வரை விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மார்ச் 31- ஆம் தேதி வரை விடுமுறைஎனவும் அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் எல்.கே.ஜி., யு.கே.ஜி மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை கொடுக்கப்பட்ட விடுமுறை அறிவிப்பை நிறுத்தி வைத்துள்ளது அரசு.

LKG AND UKG Tamilnadu corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe