Advertisment

மதுபாட்டிலில் மிதந்த பல்லி - அரசை நடவடிக்கை எடுக்கக் கோரி வீடியோ வெளியீடு!

Lizard floating in liquor - Video release demanding government action

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுவில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வலையன்குளம் சென்றுள்ளார். பின்னர் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிய அவர் அட்டைப்பெட்டியைத்திறந்து மது பாட்டிலை எடுத்துள்ளார். அப்போது பாட்டிலின் உள்ளே பல்லி இறந்து கிடப்பது தெரியவந்தது.

Advertisment

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜபாண்டி உடனே செல்போனின் தான் பேசும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும் போது, “டாஸ்மாக் கடையில் 210ரூபாய்க்கு 1848 என்ற மது பாட்டிலை வாங்கினேன். அந்த மது பாட்டிலை வாங்கியதும் அட்டைப்பெட்டியைத்திறந்து மது பாட்டிலை வெளியே எடுத்தேன். சீல் எதுவும் பிரிக்கப்படாத நிலையில் மது பாட்டிலுக்குள் ஏதோ தூசுக்கள் மிதப்பது போன்றும், பல்லி இருப்பதும் தெரியவந்தது. இவ்வாறான நிலையில் யாராவது மது அருந்தினால் யாருக்கு வேண்டுமானாலும் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் அரசு அதற்கு ஒரு நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisment

govt liquor
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe