Advertisment

சாப்பாட்டில் பல்லி, கரப்பான் பூச்சி... அதிரடி நடவடிக்கை எடுத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்!

Lizard, cockroach in the food ... Food safety officials who took action

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பஸ் நிலையம் அருகே சரவணா என்ற பெயரில் ஒரு ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் நேற்று முன்தினம் உணவு சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment

இது தொடர்பாக விசாரணை நடத்திய விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுகந்தன் தலைமையிலான குழுவினர் மற்றும் சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சங்கராபுரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் ஆகியோர் சரவணா ஹோட்டலில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

Advertisment

அதன் பிறகு சுகாதாரமற்ற முறையில் உணவு சமைத்த காரணத்தினாலும் சமைத்த உணவை பாதுகாப்பில்லாமல் வைத்ததின் அடிப்படையில் அதில் பல்லி விழுந்து அதை சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதை கண்டறிந்தனர். அதன் அடிப்படையில் அந்த ஓட்டலை 15 நாட்கள் மூட வேண்டும் பிறகு முறைப்படி அனுமதி பெற்றிருக்க வேண்டும் என உடல் உரிமையாளரிடம் அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். தொடர்ந்து நகரில் உள்ள ஒரு பிரியாணி கடையில் சோதனை செய்தனர்.

அங்கு பழைய இறைச்சி மற்றும் கரப்பான் பூச்சிகள் நிறைந்து கிடந்தது. இப்படி சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் கடை உரிமையாளர் முகமது கவுஸ் என்பவருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். அங்கிருந்த பழைய இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். சங்கராபுரம் பகுதியில் பொதுமக்கள் சாப்பிடும் ஓட்டல்களில் தரமற்ற முறையில் உணவுகளை சமைத்து பரிமாறப்படுவது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர். இது குறித்து பல ஓட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளனர். இந்த சம்பவம் சங்கராபுரம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

raid Food saftey kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe