Skip to main content

பில்ரோத் மருத்துவமனையில் கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை துவக்கம்!

Published on 24/09/2021 | Edited on 24/09/2021

 

Liver transplant begins at Bilrath Hospital

 

சென்னை மாநகரில் முன்னணி மருத்துவமனைகளுள் ஒன்றான பில்ரோத் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸ், 62 வயதான ஒரு முதியவருக்குக் கல்லீரல் உறுப்பு மாற்றுச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்திருக்கிறது. இதன் மூலம், இம்மருத்துவமனையில் கல்லீரல் உறுப்பு மாற்றுச் சிகிச்சை மையம் புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் இதனைத் தொடங்கி வைத்தார். சென்னை, அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. மோகன் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். 

 

பெங்களூரைச் சேர்ந்த முதியவர், ஹெப்படைடிஸ் B தொற்றின் காரணமாக ஏற்படுகிற கல்லீரல் இழைநார் பெருக்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்தார். முதன்மை கல்லீரல் புற்றுநோய் இருப்பதாக இவருக்குக் கண்டறியப்பட்டிருந்தது. இந்த நோயாளி மற்றும் அவருக்கான சிகிச்சை குறித்து மேலும் விளக்கமளித்த கல்லீரல் உறுப்பு மாற்றுச் சிகிச்சை நிபுணர் டாக்டர். இளங்குமரன், “கல்லீரல் இழைநார் பெருக்கத்தின் தீவிரத்தன்மையை அறிவதற்காக இந்நோயாளிக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. கல்லீரல் உறுப்பு மாற்றுச் சிகிச்சை செய்வதற்குத் தகுதியும், பொருத்தமும் இவருக்கு இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். மூளைச்சாவடைந்த ஒரு நோயாளியின் குடும்பத்தினர், கல்லீரல் உறுப்பு தானம் செய்வதற்கு விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தனர். உயிரிழந்த நபரிடமிருந்து பெறப்படும் கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக இவர் அழைத்துச் செல்லப்பட்டார். வெற்றிகரமான உறுப்பு மாற்று சிகிச்சைக்குப் பிறகு, கண்காணிப்பிற்காகத் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட இவருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் தரப்பட்டன. ஏதேனும் தொற்றுகள் ஏற்படுகிறதா என்று அறியத் தீவிர கண்காணிப்பின் கீழ் இவர் வைக்கப்பட்டிருந்தார். உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்குப் பிறகு இவரது கல்லீரலின் செயல்பாடு இயல்பாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மற்றும் ஐந்தாவது நாள் மருத்துவமனையிலிருந்து குணமடைந்தவராக இவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்” என்று கூறினார்.

 

Liver transplant begins at Bilrath Hospital

 

இறுதி நிலை கல்லீரல் இழைநார் பெருக்கம் அல்லது கல்லீரல் புற்றுநோய் இருப்பதாக அறியப்பட்டுள்ள ஒரு நோயாளிக்குக் கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சையே சிறப்பான விருப்பத்தேர்வாக இருக்கிறது. உறுப்பு மாற்றுச் சிகிச்சையானது புற்றுநோயைக் குணமாக்குவது மட்டுமன்றி, புற்றுநோய் மீண்டும் வராமலும் தடுக்கிறது. இந்தியாவில், ஒரு ஆண்டுக்கு ஏறக்குறைய 25,000 நபர்களுக்கு (உயிருள்ள மற்றும் உயிரிழந்த நபர்களிடமிருந்து பெறப்படும் கல்லீரல் தானத்தின் வழியாக) கல்லீரல் உறுப்பு மாற்றுச் சிகிச்சை தேவைப்படுகிறது. எனினும், ஒரு ஆண்டில் ஏறக்குறைய 2000 கல்லீரல் உறுப்பு மாற்றுச் சிகிச்சைகள் என்ற அளவிலேயே திறன் வசதி இருக்கிறது. கல்லீரல் நோயை உரிய நேரத்தில் கண்டறிவதும், உரியச் சிகிச்சை அளிப்பதும் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கும் என்பதை அறிந்திருப்பது அவசியம். 

 

கல்லீரல் நோய்களுக்கான சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்றுச் சிகிச்சை மையம், டாக்டர் இளங்குமரனின் தலைமையின் கீழ் பில்ரோத் மருத்துவமனையில் இயங்குகிறது. டாக்டர். இளங்குமரன், இதுவரை 1,700-க்கும் அதிகமான உறுப்பு மாற்றுச் சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர். சுகி சுப்ரமணியம், டாக்டர் சிவராஜ், டாக்டர் சங்கர் நாராயணன், என்ற உயர் தகுதி மிக்க அறுவைசிகிச்சை நிபுணர்கள், டாக்டர். குலசேகரன், டாக்டர். ஹரி பாலகிருஷ்ணன், டாக்டர். ரெங்கராஜன் மற்றும் டாக்டர். சுரேஷ் ஆகிய மயக்கவியல் துறை வல்லுநர்களும் உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கான மருத்துவக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இங்கு நிறுவப்பட்டிருக்கிற அனைத்து சாதனங்களுடன் கூடிய உள்கட்டமைப்பு வசதியும் மற்றும் அறுவைசிகிச்சைக்குப் பிறகு வழங்கப்படும் நிபுணத்துவமிக்க கவனிப்பும், நோயாளிகள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் குணமடைந்து மீண்டெழுவதை உறுதி செய்தல், சிறப்பான விளைவுகள் கிடைப்பதை உறுதி செய்யக் கல்லீரல் உறுப்பு மாற்றுச் சிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகள் விரைவில் குணமடைந்து மீள்வதற்கு உதவ திறன் மிக்க, நன்கு பயிற்சியளிக்கப்பட்ட செவிலியர்கள், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பை வழங்கும் சிறப்புப் பணியாளர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களின் குழு இங்குச் செயல்படுகிறது. 

 

1990ம் ஆண்டில் 30 படுக்கை வசதிகள் கொண்ட ஒரு மருத்துவமனையாகத் தொடங்கப்பட்ட பில்ரோத் மருத்துவமனை, சென்னை மாநகரில் இரு முக்கியமான அமைவிடங்களில் 350 படுக்கை வசதிகள் கொண்ட பன்முக சிறப்புச் சிகிச்சை மருத்துவமனையாக வளர்ச்சியடைந்திருக்கிறது. பில்ரோத் இன்ஸ்டியூட் ஆஃப் கேஸ்ட்ரோ என்டராலஜி (BIG) தென்னிந்தியாவில் மிகத் தொன்மையான மற்றும் மிகச்சிறப்பான சிகிச்சை துறைகளுள் ஒன்றாகப் புகழ் பெற்றிருக்கிறது. இரைப்பை குடலியல், கல்லீரலியல் மற்றும் ஊட்டச்சத்து ஆகிய பிரிவுகளில் உயர்திறன் கொண்ட மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு, ஒரு அமைவிடத்தின்கீழ் சிறப்பான சிகிச்சையை வழங்கி வருகிறது. ஒரு நாளில் 100 வெளிநோயாளிகள் மற்றும் 25 சிகிச்சை முறைகள் மற்றும் அறுவைசிகிச்சைகள் ஆகியவற்றை கையாளும் இம்மருத்துவமனை, இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சையளித்திருக்கிறது. ஏறக்குறைய 30 ஆண்டுகளாக புகழ்பெற்ற இரைப்பை குடலியல் சிறப்பு வல்லுநரான டாக்டர். V. ஜெகநாதனால் இம்மருத்துவமனை நிறுவப்பட்டது. 

 

Liver transplant begins at Bilrath Hospital

 

சென்னை மாநகரில் இரைப்பை குடலியல் மற்றும் கல்லீரலியலில் மிகச்சிறந்த மருத்துவமனைகளுள் ஒன்றாக இன்றைக்கு இம்மருத்துவமனை பிரபலமாகத் திகழ்கிறது. கல்லீரல் நோய்களுக்கான மருத்துவ மேலாண்மையில் தொடங்கி, உறுப்பு மாற்று சிகிச்சைகள் வரை அனைத்து வகையான கல்லீரல் நோய்களுக்கும் விரிவான சிகிச்சையை இதன் கல்லீரல் கிளினிக் வழங்கிவருகிறது. “சென்னை மாநகரின் பில்ரோத் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்ஸ், அதன் ஒரு பிரிவான  பில்ரோத் இன்ஸ்டியூட் ஆஃப் கேஸ்ட்ரோஎன்டராலஜி (BIG)-யில் அதிக அனுபவமிக்க மற்றும் நன்கு பயிற்சிபெற்ற மருத்துவர்களை கொண்டிருக்கிறது.

 

கோவிட்-19 பெருந்தொற்றானது, உயிரிழந்தவர்களிடமிருந்து பெறப்படும் உடல் உறுப்புகளில் கடுமையான பற்றாக்குறையை ஏற்படுத்தியிருந்தது. இதன் விளைவாக, இப்பெருந்தொற்று தொடங்கிய கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பல மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று சிகிச்சைகள் செய்வது நிறுத்தப்பட்டன. நோயாளிகள் விரும்பி தேர்வுசெய்து மேற்கொள்கிற அறுவைசிகிச்சைகளுக்கு அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டன. கோவிட்-19-ன் காரணமாக அதிக தொற்றுப் பரவல் சூழல் நிலவியதால் உறுப்பு மாற்று சிகிச்சைகளை மீண்டும் தொடங்க இயலாத நிலை ஏற்பட்டது. சென்னை மருத்துவமனைகளில், உறுப்பு மாற்று சிகிச்சைக்காக நோயாளிகள் நீண்டகாலம் காத்திருக்குமாறு நேர்ந்தது.

 

உறுப்பு தானம் அளிப்பவர்களிடம் கோவிட்-19 தொற்று நிலையை தீர்மானிப்பது, உறுப்பு மாற்று சிகிச்சையின்போது அல்லது அதற்குப் பிறகு, தானம் பெறுபவர்களுக்கு இத்தொற்று ஏற்படுவதற்கான இடர்வாய்ப்பு, அறுவைசிகிச்சைக்கு பாதுகாப்பான சூழலை உறுதிசெய்வது போன்ற பல காரணிகள் இவ்விஷயத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. இதுவே, பெருந்தொற்று காலத்தில் உறுப்பு மாற்று சிகிச்சைகளை பாதிப்பதற்கான காரணம். உறுப்பு மாற்றுக்கான தேவை பெரிதும் அதிகரித்தது, ஆனால் தானம் அளிக்க முன்வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இம்மாநிலத்தில் ஒரு ஆண்டில் சுமார் 400 நபர்கள், உயிரிழந்தவர்களிடமிருந்து பெறப்படும் கல்லீரலுக்காக காத்திருக்கின்றனர் என்று மதிப்பிடப்படுகிறது. நூற்றுக்கணக்கான நோயாளிகள் தானமளிப்பவர்களுக்காக காத்திருக்கின்றனர் மற்றும் உறுப்பு தானம் பெற இயலாத காரணத்தினால் இறுதியில் உயிரிழக்கின்றனர். இதுபோலவே, சிறுநீரகங்கள், இதயம் மற்றும் நுரையீரல் உறுப்பு மாற்றுக்காக காத்திருக்கும் பிற நோயாளிகளின் நிலைமையும் மிகவும் சிக்கலாக, ஆபத்தானதாக இருக்கிறது,” என்று பில்ரோத் ஹாஸ்பிட்டல்ஸ்-ன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், டாக்டர். ராஜேஷ் ஜெகநாதன் கூறினார். 

 

“உடலுறுப்புகளுக்கு கடுமையான பற்றாக்குறை இருந்தபோதிலும் கோவிட்-19 பரவல் உச்சத்திலிருந்த காலத்திலும்கூட, கடுமையான தொற்று கட்டுப்பாடு நடவடிக்கைகளை கடைப்பிடித்து, தடங்கலற்ற சிகிச்சையை நோயாளிகளுக்கு பில்ரோத் ஹாஸ்பிட்டல்ஸ் வழங்கி வந்திருக்கிறது. இரைப்பை குடலியல் மற்றும் கல்லீரல் பிரச்சனைகள் உள்ள எவராயினும், பில்ரோத் இன்ஸ்டியூட் ஆஃப் கேஸ்ட்ரோ என்டராலஜி (BIG)-க்கு நேரில் வருகை தரலாம் மற்றும் மிதமான கட்டணத்தில் மிகச்சிறந்த சிகிச்சைகளைப் பெற்று பயனடையலாம். மிக சமீபத்திய நோயறிதல் சாதனங்கள் மற்றும் செயல் உத்திகளை இம்மருத்துவமனை கொண்டிருக்கிறது. உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள நோயாளிகளைக் கையாள்வதற்கு பல்வேறு துறைகள் அடங்கிய நிபுணத்துவமிக்க மருத்துவர்கள் குழு இங்கு திறம்பட செயல்படுகிறது” என்ற அவர், மேலும் “கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை பிரிவில்” கிடைக்கக்கூடிய சிறப்பு வசதிகள் மற்றும் சேவைகள்: கல்லீரல் உறுப்பு மாற்றுசிகிச்சை 24 மணிநேரமும் பணியில் இருக்கும் பயிற்சிபெற்ற சிறப்பு கல்லீரலியல் மருத்துவர், கல்லீரல் நோய்கள் மற்றும் சிக்கல்களுக்கு விரிவான 24/7 மேலாண்மை, மிக நவீன கல்லீரல் தீவிர சிகிச்சைப் பிரிவு, கல்லீரல் டயாலிசிஸ், கல்லீரல் புற்றுநோய்க்கு  மேம்பட்ட சிகிச்சை, கல்லீரலுக்கு கீமோதெரபி சிகிச்சை, ரேடியோ-பிரீக்வன்சி மூலம் உறுப்பு நீக்கம், கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை மையம் தொடங்கப்பட்டிருப்பது குறித்து பேசிய பில்ரோத் ஹாஸ்பிட்டல்ஸ்-ன் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். ஶ்ரீலேகா வெங்கடேசன், “இந்த உறுப்பு மாற்று சிகிச்சை மையம், இதற்கு முன்பே இருந்துவருகிற ‘BIG’ (பில்ரோத் இன்ஸ்டியூட் ஆஃப் கேஸ்ட்ரோஎன்டராலஜி) என்பதற்கு நவீன உள்கட்டமைப்பு வசதி மற்றும் சாதனங்களைக் கொண்ட கூடுதல் சிகிச்சை பிரிவாக செயல்படும். உடல்நல பராமரிப்பு தொழில்துறையில் முன்னோடி என்று அறியப்படுகிற நாங்கள், சரியான உள்கட்டமைப்பு வசதி மற்றும் நிபுணத்துவத்தைக் கொண்டு உயர்தர உடல்நல பராமரிப்பு சேவைகளை இன்னும் அதிக அளவில் நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்” என்று கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தையின் உயிரைக் காக்க மகன் செய்த தியாகம்..!

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

Sacrifice made by son to save father's life

 

தேனி அருகே உள்ள பழனிசெட்டியில் அறிஞர் அண்ணா தெருவில் வசிப்பவர் செல்வராஜ். இவர் அதே ஊரில் செல்ஃபோன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவருக்கு சந்தன மாரியம்மாள் என்ற மனைவியும், அஜய் குல்சன், கமல் குல்சன் என்ற மகன்களும் உள்ளனர். அஜய் குல்சன் பி.எஸ்சி. நர்சிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்துவந்தார். இரண்டாவது மகன் கமல் குல்சன், பி.எஸ்சி. நர்சிங் 2வது ஆண்டு படித்துவருகிறார்.

 

செல்வராஜுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்றபோதிலும் பாதிப்பின் தாக்கம் குறையாமல் மேலும் தீவிரம் அடைந்தது. பாதிப்பு முற்றிய நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

அங்கு அவருக்குப் பரிசோதனை செய்தபோது கல்லீரல் செயலிழந்துவிட்டதாகவும் அவருக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் உயிரைக் காப்பாற்றிவிடலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். உடனே அஜய் குல்சன் தனது தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய முன்வந்து, தனது முடிவை தாயிடம் கூறினார். ஆனால் அவர், மகனுக்குப் பதில் தானே கல்லீரல் தானம் கொடுப்பதாக தெரிவித்தார். அதன்படி சந்தனமாரியம்மாள் கல்லீரலில் பாதியை எடுத்து அவருடைய கணவருக்குப் பொருத்த டாக்டர்கள் பல்வேறு கட்ட பரிசோதனைகள் செய்தனர். ஆனால், அவர் கல்லீரலைக் கொடுத்தால் அவருக்கு கல்லீரல் மறுவளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும், அதனால் இருவரின் உயிருக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறி டாக்டர்கள் அந்த முடிவை நிராகரித்தனர்.

 

Sacrifice made by son to save father's life

 

அதன்பிறகு அஜய் குல்சன் தனது கல்லீரலை தந்தைக்கு தானம் செய்ய விரும்புவதாக டாக்டர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து அவருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் தானம் கொடுப்பதால் அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என தெரியவந்தது. இதையடுத்து வருவாய்த்துறை மூலம் முறையாக அனுமதி பெற்றனர். பின்னர் கடந்த 1½ மாதத்துக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் அஜய் குல்சனின் கல்லீரலில் இருந்து 60 சதவீதம் எடுத்து அவருடைய தந்தைக்குப் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து செல்வராஜ் காப்பாற்றப்பட்டார். தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இருவரும் நலமாக இருந்துவருகிறார்கள்.

 

இது சம்பந்தமாக அஜய் குல்சனிடம் கேட்டபோது, “எனது தந்தைக்கு மதுபழக்கம் எதுவும் கிடையாது. பல ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அவர் அதிகமாக மருந்துகள் எடுத்துக்கொண்டதால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனது உடலில் இருந்து 60 சதவீதம் கல்லீரல் எடுத்து எனது தந்தைக்குப் பொருத்தப்பட்டது. தற்போது எனக்கு 80 சதவீத கல்லீரல் வளர்ச்சி அடைந்துள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த 3 மாதங்களுக்குள் முழுமையாக வளர்ச்சி பெற்றுவிடும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். தந்தையின் சிகிச்சைக்கு ரூ. 40 லட்சத்துக்கும் மேல் செலவானது. உறவினர்கள், அப்பாவின் நண்பர்கள் செய்த உதவிகள் அறுவை சிகிச்சையை எளிதாக்கியது. ஆரோக்கியமாக இருக்கும் நபர் கல்லீரலை தானம் செய்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. கல்லீரல் தானம் குறித்து மக்களிடம் அதிகம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்” என்று கூறினார்.