Advertisment

தறிநாடா ஓசை கேட்காது...! - லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம்?

இந்திய பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கு உத்தரவுக்கு மக்கள் தயாராகி விட்டனர். மருத்துவமனைகளை தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டது, மூடப்பட்டும் வருகிறது. இதில் நாட்டின் எல்லை தொடங்கி மாநில எல்லை வரை அடக்கம்.

Advertisment

சாதாரண தொழிற்சாலைகளும்ஞாயிற்கு கிழமை ஒரு நாள் சப்தமில்லாமல் உறங்க இருக்கிறது. இதில் விசைத்தறிகளும் அடக்கம். கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே பெரிய ஜவுளி நிறுவனங்கள், நகைக்கடைகள் வருகிற31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதைப்போல் முக்கிய சுற்றுலாத்தலங்கள், கோவில்கள் பூட்டப்பட்டது. ஜவுளி சந்தை ,கால்நடைச் சந்தைகள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் ஏற்கனவே பல கோடி வணிகம் முடங்கி விட்டது.

Advertisment

Livelihood of millions of people?

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணி செய்கின்றனர். இங்கே ரேயான் காட்டன், காடாத்துணி தினமும் 2 கோடி மீட்டர் வரை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதுபோல பெட்சிட் ரகங்கள் ஏற்றுமதி ரகங்களும் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தநிலையில் கரோனாதடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஞாயிற்றுக்கிழமை முதல் வருகிற31ஆம் தேதி வரை அனைத்து விசைத்தறிகளும் இயங்காது என ஈரோடு விசைத்தறி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதன்மூலம் விசைத்தறிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணி செய்யும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள்,வேலையை இழக்கிறார்கள். ஏற்கனவே ரூபாய் 100 கோடி மதிப்பிலான ரேயான் துணிகள்குடோன்களில் தேங்கி ஸ்டாக்காக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது விசைத்தறிகள் மூடப்படுவதால் பல கோடி வணிகம் முடங்குவதோடு லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியான அபாயத்தை ஏற்டுத்தியுள்ளது.

corona virus Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe