அறுவை சிகிச்சைக்குப்பின்னர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடல் நிலை குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ஸ்டாலினுக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. வலது தொடையில் இருந்த நீர்க்கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அவர் நலமுடன் உள்ளார். இன்று பிற்பகலில் அவர் வீடு திரும்புவார்’’ என்று தெரிவித்துள்ளது.