Advertisment

கிணற்றில் நீச்சல் பழகிய சிறுமி பரிதாப பலி!

hjk

நீச்சல் அடிக்க பழகிய பள்ளி மாணவி ஒருவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எஸ். நாரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலி. 8ம் வகுப்பு மாணவியான அவர், அதே பகுதியை சேர்ந்த சிறுமிகளுடன் கிணற்றில் நீச்சல் பழகச் சென்றுள்ளார். அப்போது வாகனத்தின் டியூபை உடலில் மாட்டிக்கொண்டு பயிற்சி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக உடலில் மாட்டியிருந்த ட்யூப் விலகியது.

Advertisment

இதனால் அவர் நீரில் தத்தளிக்க ஆரம்பித்த நிலையில், அருகில் இருந்த மற்ற மாணவிகள் அவருக்கு உதவி செய்ய முயன்றும் அவர்களால் கமலி நீரில் மூழ்குவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. உடனடியாக அருகில் இருந்தவர்களுக்கு மாணவிகள் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் விரைவாக செயல்பட்டு உடனடியாக சிறுமியைத் தூக்கினார்கள். இருந்தும் அரை மணி நேரத்துக்கும் மேலாக அவர் நீரில் மூழ்கி இருந்ததால் சிறுமி சடலமாகவே மீட்கப்பட்டாள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

dead
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe