அரியலூரில் நூலிழையில் உயிர் தப்பிய சிறுமி... வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி!

அரியலூரில் சிறுமி ஒருவர் வாகன விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகிபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Little girl who survives in Ariyalur in accident... cctv footage

அரியலூரில் பெரியார் நகரில் வசித்து வரும்முருகேசன் என்பவர் இருசக்கர வாகனத்தில் தனது பேத்தியுடன் மருந்துவாங்க மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கிக்கொண்டு பைக்கில் நின்றிருந்தார்.

பேத்தியைஅழைத்து மீண்டும் வாகனத்தில் அமர வைக்க முயலஅந்த சிறுமியும் இருசக்கர வாகனத்திற்கு அருகில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ரோட்டில் வந்த மினி லாரியானதுமுருகேசனின் பைக் மீது மோதி முருகேசனையும் பைக்கையும் ரோட்டில் தரைத்துசென்றது.ஆனால் பைக்கில் ஏற முற்பட்டசிறுமி நூலிழையில் உயிர் தப்பி சுதாரித்துக் கொண்டு அருகிலிருந்த நடைமேடை மேல் ஏறி நின்று கொண்டார்.

Little girl who survives in Ariyalur in accident... cctv footage

இந்த விபத்தில் சிக்கிய முருகேசன் திருச்சியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

accident Ariyalur CCTV footage child
இதையும் படியுங்கள்
Subscribe