Little girl Missing ! Police investigating youth!

Advertisment

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி வேலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(37). இவரது 14 வயது மகள் கள்ளகாம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 7ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ராஜேந்திரன் தன்னுடைய மகளை காணவில்லை என்று துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில் மருங்காபுரி பகுதியைச் சேர்ந்த சின்னையுர்(21) என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாகவும், தன்னுடைய மகளை காதலித்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.