A liter of petrol is free if you say '20 thirukural '- do you know where?

Advertisment

சமீப காலமாகவே பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் வரலாற்றில் முதல்முறையாக பெட்ரோல் விலை 90 ரூபாயை தொட்டுள்ளது. பெட்ரோல் விலையுயர்வால்மக்களின் அடிப்படை அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உருவாகும் சூழலில், விலைவாசி ஏற்றம்குறித்தஅச்ச உணர்வு அதுவும், இந்த கரோனா காலத்தில் மக்களிடையே மேலோங்கியுள்ளதுஎன்றும் கூறலாம். இப்படிப்பட்ட நிலையில் அண்மையில் சமூக வலைதளங்களில், ‘20 திருக்குறள்கள் சொன்னால்ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்’ என்பது போன்ற பதிவுகள்விளம்பரங்களாக வெளியாகியிருந்தது.

 A liter of petrol is free if you say '20 thirukural '- do you know where?

கரூர் மாவட்டம் வள்ளுவர் நகரைச்சேர்ந்த பெட்ரோல்பங்க்கில்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் மீதும்,திருக்குறள் மீதும்கொண்ட ஆர்வம் மற்றும் பற்று காரணமாக, அந்தப் பெட்ரோல் பங்கின்உரியமையாளர் செங்குட்டுவன் '20 திருக்குறள்கள் சொன்னால்ஒரு லிட்டர்பெட்ரோல் இலவசம்' என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதேபோல்10 திருக்குறள்கள்சொன்னால்அரை லிட்டர் பெட்ரோல்இலவசம் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து பலரும் அந்தப் பெட்ரோல் பங்கிற்கு சென்றுதிருக்குறளைஒப்புவித்து ஒரு லிட்டர்பெட்ரோல்வாங்க குவிந்து வருகின்றனர். சிலர்திருக்குறள்ஒப்புவிக்கும் முறை மீண்டும் பள்ளி நினைவுகளை கண் முன் கொண்டுவருதாகவும் மெய் சிலிரிக்கின்றனர்.