Skip to main content

நக்கீரன் செய்தியால் ஆள்மாறாட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு! 

Published on 07/02/2020 | Edited on 07/02/2020

குரூப்-4 பதவிக்கான தட்டச்சுத் தேர்வில் ஆள்மாறட்டம் செய்யத்தூண்டிய  மதுரையைச் சேர்ந்த ஸ்ரீநாதன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் டைப் ரைட்டிங் இன்ஸ்டியூட் உரிமையாளர் செல்லதுரை,   ஆள்மாறாட்டம் செய்த விக்னேஷ், மரகதம்  ஆகியோர் குறித்து 2019 மே 22-24 தேதியிட்ட நக்கீரனில் அம்பலப்படுத்திய செய்தியின் அடிப்படையில்....

 

 Litigation for impersonators

 

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கூடுதல் இயக்குனர் அருளரசு மதுரை ஜெய்ஹிந்த் புரம் காவல்நிலையத்தில் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.!

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; நான்கு பேருக்கு போலீஸ் கஸ்டடி

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
nn

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) என்பவர் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) அன்று மாலை கொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவின்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி என 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இத்தகைய சூழலில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்து இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவரது மகன் ஹரிதரன் (வயது 37) என்பவரை நேற்று முன்தினம் (20.07.2024) கைது செய்தனர்.

இந்நிலையில் பூந்தமல்லி சிறையில் இருந்த பொன்னை பாலு, ராமு, அருள், ஹரிஹரன் ஆகிய நான்கு பேரையும் போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரனை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும், பொன்னை பாலு, ராமு, அருள் ஆகிய மூன்று பேரை மூன்று நாட்களில் காவலில் எடுத்து  விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. நான்கு பேரையும் பரங்கிமலை பகுதியில் உள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே போலீஸ் கஸ்டடியில்  எடுக்கப்பட்ட  திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

‘டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு’- 7.90 லட்சம் பேர் விண்ணப்பம்!

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
tNPSC Group 2 exam 7.90 lakh people applied

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பப் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.

அந்த வகையில் குரூப் 2, குரூப் 2ஏ பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. கடந்த ஜூன் 20 ஆம் தேதி (20.06.2024) அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் விண்ணப்பதாரர்கள் ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2327 காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இத்தகைய சூழலில் தான் பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களினால் இணைய வழியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கு இயலவில்லை என தேர்வர்கள் தெரிவித்ததால் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கும் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கும் நேற்று (20.07.2024) வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. 

tNPSC Group 2 exam 7.90 lakh people applied

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு மொத்தம் 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஒரு பணியிடத்திற்கு சராசரியாக 340 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.