/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1314.jpg)
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் நாளை (15.07.21) கொண்டாடப்படவிருக்கிறது. இந்நிலையில் அவரது பிறந்த நாளன்று தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் சார்பாக அக்கட்சியின் நிறுவனர் ராஜேஸ்வரி பிரியா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் பொற்காலம் என்று போற்றப்படும் காலம் கர்ம வீரர் காமராஜர் அவர்கள் ஆட்சி புரிந்த காலம் ஆகும். எல்லோரும் கல்வி கற்க வேண்டுமென்ற உயரிய இலக்கை கொண்டிருந்தவர். மது இல்லா தமிழகமாக மக்களை காத்து ஆட்சி புரிந்தவர். மக்களின் நிலை அறிந்து மகத்தான திட்டங்களை வகுத்தவர்.
அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அரசு அவரது பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதியன்று மதுக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பாக கோரிக்கை வைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)