்ிு

Advertisment

தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாகத் தளர்வுகளற்ற ஊரடங்கு நடைமுறையில் இருந்தது வந்தது. தற்போது ஓரளவு கரோனா கட்டுக்குள் வந்ததை அடுத்து, இரண்டு மாநிலங்களிலும் பொதுமக்களுக்கு சில தளர்வுகளை அரசுகள் வழங்கியுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் மளிகை, காய்கறி உள்ளிட்ட கடைகளை மாலை 5 மணி வரை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதே போன்று புதுவையிலும் கடைகளைத் திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியதோடு, இன்றிலிருந்து மதுபானக் கடைகளும் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில், 40 நாட்களுக்குப் பிறகு இன்று காலை மதுக்கடைகள் திறக்கப்பட்டதும் குடிமகன்கள் ஆவலுடன் மதுபானங்களை வாங்கி சென்றனர். அதிலும் ஒருவர் மதுபானத்தைப் பார்த்ததும் அதனைக் கட்டியணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.