Skip to main content

சரக்கு மற்றும் பீடி கேட்டதால் கொலை! வாலிபர் கைது!

Published on 19/05/2020 | Edited on 19/05/2020
Chicken shop

 

 

 

மதுபானம் மற்றும் பீடி கேட்டதால் மாற்றுத்திறனாளி ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட வாலிபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், தீர்த்தகுளம் பகுதியில் முருகன் கோவில் எதிரில் கோழி கறிக்கடை நடத்தி வருபவர் கண்ணன் மகன் செங்கூட்டுவன் (45). மாற்றுதிறனாளியான இவர் நேற்று இரவு 11.30 மணியளவில் அவரது கடையில் இருந்துள்ளார். தீர்த்தகுளம் மேளக்காரர் வீதியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் சதீஷ் (25). இவர் சென்னையில் கறி வெட்டும் பணி செய்து வருகிறார். இவர் செங்கூட்டுவன் நடத்தி வரும் கடை வழியே சென்றுள்ளார். 

அப்போது சதீஷிடம், செங்குட்டுவன் மது மற்றும் பீடி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ், செங்குட்டுவனை கீழே தள்ளி் மர பென்சை (Bench) கழுத்தில் போட்டு அதன் மேல் நின்றும், அங்கிருந்த பீங்கான் பொம்மையை எடுத்து முகத்தில் அடித்ததாகவும், இதில் செங்குட்டுவன் மயக்கமடைந்ததாகவும் கூறப்படுகிறது. செங்கூட்டுவனை மீட்டு திண்டிவனம் அரசு  மருத்தவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்தவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
 

 

உடலை கைப்பற்றிய திண்டிவனம் போலீஸார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாற்றுத்திறனாளியான செங்குட்டுவனை கொலை செய்த சதீஷ் என்பவரை கைது செய்து திண்டிவனம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். மதுவிற்காக மாற்றுத்திறனாளியை அடித்துக் கொலை செய்த சம்பவம் திண்டிவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.       
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒயின் ஷாப்புகளில் அதிகவிலை! ஆத்திரத்தில் பெட்டி பெட்டியாக அள்ளிச்சென்ற பொதுமக்கள்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
liquor shops are selling liquor bottles at high prices, causing public dissatisfaction in Telangana

தெலங்கானாவில் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறி, நான்கு ஒயின் ஷாப்புகளை முற்றுகையிட்ட பொதுமக்கள், கடைகளில் இருந்த ரூ.22 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை அள்ளிச்சென்றனர். தெலங்கானா, பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம், தெகுலப்பள்ளியில் MRP விலையைவிட ரூ.20 முதல் ரூ.30 வரை அதிக விலைக்கு, மது விற்பனையாளர்கள் சிண்டிகேட் அமைத்து மது விற்பதாக  மதுப்பிரியர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மதுக்கடைகள் முன்பு திரண்டு, நான்கு ஒயின்ஷாப்புகளில்  இருந்த  மதுபானங்களை அள்ளிச் சென்றனர். பொது மக்கள் பலரும் மது பாட்டில்களை அள்ளிச்சென்ற நிலையில், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் மதுபாட்டில்களை எடுத்துச்சென்றனர். இதனை ஊழியர்கள் தடுக்க முயன்றும் முடியாததால், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

liquor shops are selling liquor bottles at high prices, causing public dissatisfaction in Telangana

இச்சம்பவத்தின்போது, பெரும்பாலும் பெண்களே மதுபாட்டில்களை எடுத்துச் சென்றனர். இதனையடுத்து, டிஎஸ்பி சந்திரபானு தலைமையில் அங்கு வந்த காவல்துறையினர், கடை உரிமையாளர்களின் புகாரின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.  மொத்தத்தில் சுமார் ரூ.22 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பொது மக்கள் அள்ளிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Next Story

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Boy incident by electrocution Chief Minister MK Stalin obituary

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பெலாகுப்பம் ரோடு பாரதிதாசன் பேட்டை பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் தேவேந்திரன் என்பவர், அப்பகுதியில் உள்ள அரசு சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் பிடிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது சிறுவன் தேவேந்திரன் அங்குள்ள மோட்டாரின் சுவிட்ச்சை ஆன் செய்ததாக கூறப்படுகிறது. அச்சமயம் தேவேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதனைப் பார்த்த அவருடைய தந்தை மகனை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிறுவன் தேவேந்திரன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதே சமயம் போர்வெல் சுவிட்ச் ஷாக் அடிப்பதால் மரக் குச்சியை வைத்து பயன்படுத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், பலமுறை இதை மாற்றக் கோரியும் நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் தற்போது இந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தனர்.

மேலும் போர்வெல் மோட்டார் சுவிட்சை இயக்கிய 10 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் உயிரிழந்த சிறுவன் தேவேந்திரன் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்து ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.