கரோனா பரவலைத் தடுக்க மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழக அரசின் அனைத்து எச்சரிக்கைகள், விழிப்புணர்வு பரப்புரைகளையும் கடந்து மதுக்கடைகளில் கூட்டம் வழிகிறது. மதுக்கடைகள் கொரோனா வைரசை பரப்பும் மையங்களாக மாறி விடக்கூடாது. ஆகவே, மாபெரும் மனிதப் பேரழிவை தடுக்க வசதியாக மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்!

tasmac

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் அறிவித்துள்ள ஒரு நாள் மக்கள் ஊரடங்கு வரவேற்கத்தக்க நடவடிக்கை. அவரது அறிவிப்பை மதித்து தனித்திருப்போம்... விழித்திருப்போம்.... இதையே அடுத்த 3 வாரங்களுக்கு வாடிக்கையாக மாற்றிக்கொள்ள முயலுவோம்!

மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பன்னாட்டு நிறுவனங்கள், தொழில் வணிக அமைப்புகள், தொழிலதிபர்கள், வசதி படைத்தவர்கள் தாராளமாக நன்கொடை வழங்கி உதவ வேண்டும்! இவ்வாறு கூறியுள்ளார்.