கள்ளத்தனமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் பறிமுதல்

ffff

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் - வேளச்சேரி சாலையில் சேலையூர் உள்ளது. இந்தப் பகுதியில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்கப்படுவதாக அரசு அதிகாரிகளுக்குத்தகவல் கிடைத்தது. அதிகாலை 4 மணியில் இருந்து 10 மணி வரையும் இரவு 8 மணிக்கு மேலேயும் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்கப்படுகிறது என்றும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து அப்பகுதியில் அதிகாரிகள் போலீசாரின் உதவியுடன் ரகசியமாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கள்ளத்தனமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கள்ளத்தனமாக விற்பனைக்கு வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மதுபான பாட்டில்கள் கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

liquor sales thambaram
இதையும் படியுங்கள்
Subscribe