liquor sales on scooters; A video that goes viral

Advertisment

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மது கடைகளும் மூடப்பட்டுள்ளது. டாஸ்மாக் பார்களும் மூடப்பட்டுள்ளது. இந்தநிலையில் சென்னை தியாகராயநகரில் ஏஜிஎஸ் திரையரங்கம் அருகே உள்ள பகுதியில் பட்டப்பகலில் நபர் ஒருவர் ஸ்கூட்டரில் வைத்து சட்டவிரோதமாக மது விற்கும் பரபரப்பு காட்சிகள் வெளியாகி இருக்கிறது.

வழக்கமாக 140 ரூபாய்க்கு விற்கப்படும் மது பாட்டில் இன்று பாட்டிலுக்கு 110 ரூபாய் கூடுதலாக வைத்து 250 ரூபாய்க்கு சட்டவிரோதமாக விற்கப்பட்டு வருகிறது. சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் நேற்று இரவு வழக்கம் போல் அடைக்கப்பட்ட நிலையில் சிலர் அதிகமாக மது பாட்டில்களை வாங்கி வைத்துக் கொண்டு இன்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஸ்கூட்டரில் நபர் ஒருவர் கூலாக மது விற்கும் அந்த வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.