கரோனா கால பொது முடக்கம் முடிவடைந்து தளா்வுகள் ஆரம்பித்த சில நாட்கள் ஆன நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ள நிலையில் மீண்டும் திருட்டு தொழில் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது.

Advertisment

கரோனா பொது முடக்கம் காலங்களில் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த மணல் திருட்டு, லாட்டரி விற்பனை, அரசு மதுபான பாட்டில்களை கள்ளத்தனமாக வெளியில் விற்பது உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகள் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. இதனை தடுக்க திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் ஜெயசந்திரன் தனிப்படைகளை அமைத்து குற்றங்களை தடுக்க உத்தரவிட்டிருந்தார்.

Advertisment

அதனடிப்படையில் திருச்சி மாவட்ட துறையூா் பகுதியில் உள்ள புலிவலம், பகளவாடி உள்ளிட்ட பகுதிகளில் ஓமாந்தூா் பகுதியை சோ்ந்த ஆனந்தகுமார் (39) அரசு மதுபானத்தை கள்ள சந்தையில் விற்பனை செய்தபோது காவல்துறையினா் அவரை கைது செய்ததோடு அவரிடம் இருந்து 180 மது பாட்டில்களும், அதனை விற்பனை செய்ய பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் காவல்துறையினா் பறிமுதல் செய்தனர்.

மேலும் அதே பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையும் அதிகரித்துள்ளதால் அதனை தடுக்கவும் குற்றவாளிகளை பிடிக்கவும் தனிப்படை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Advertisment