Advertisment

டாஸ்மாக் கடை காவலரை கட்டிப்போட்டு மது பாட்டில்கள் கொள்ளை

Ulundurpet

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருவெண்ணைநல்லூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 30ம் தேதி இரவு காவலராக வேலை பார்த்து வந்த ஹரிதாஸ் என்பவரை நான்கு பேர் திடீரென கட்டிப் போட்டனர். பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்களை சாக்குமூட்டையில் கட்டிச் சென்றனர்.

Advertisment

இரவு ரோந்து போலீசார் அவ்வழியே வரும்போது தற்செயலாக மதுபாட்டில் கொள்ளையடித்தவர்கள் பார்த்துவிட்டு, அவர்களை பிடிப்பதற்காக துரத்தி உள்ளனர், ஆனால்அவர்கள் தப்பிவிட்டனர். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படையினர் மது கொள்ளையர்களை தேடி வந்தனர்.

Advertisment

இந்த நிலையில் நல்லூர்க் கோட்டைக்கு தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பெயரில் இருவரை பிடித்து விசாரித்தனர். அதில் உளுந்தூர்பேட்டை சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த 30 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் காவலரை கட்டிப்போட்டு கொள்ளையடித்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், ஆறுமுகம் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 70 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களைபறிமுதல் செய்துள்ளது போலீஸ்.

Robbery liquor tasmac shop ulundurpet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe